வசமாக மாட்டிக்கொண்ட கண்ணன்.. மொத்த பாண்டியன் ஸ்டோர்ஸ் குடும்பமும் ஷாக்! அடுத்த வார ப்ரோமோ
பாண்டியன் ஸ்டோர்ஸ்
விஜய் டிவியின் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடரில் அடிக்கடி வரும் திருப்பங்கள் தொடர்ந்து பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அதிலும் சண்டைபோட்டு பிரிந்த குடும்பம் மீண்டும் ஒன்று சேர வாய்ப்புகள் தொடங்கி இருக்கிறது.
இந்நிலையில் தற்போது யாரும் எதிர்பார்க்காத விதமாக கண்ணன் ஒரு பெரிய சிக்கலில் மாட்டி இருக்கிறார். அது அடுத்த வார ப்ரோமோவில் காட்டப்பட்டு இருக்கிறது.
கைதான கண்ணன்
வங்கியில் பணியாற்றி வரும் கண்ணன் தனது பணக்கஷ்டத்திற்காக லஞ்சம் வாங்கி வருவது அவரது மேலதிகாரிக்கு தெரியவருகிறது. அதனால் அவர் அவரை அழைத்து பேசுகிறார்.
அதன் பின் கண்ணனை எப்படியாவது சிக்க வைக்க வேண்டும் என திட்டம்போட்டு அவர் சிக்கவைத்துவிடுகிறார். கண்ணன் லஞ்சம் வாங்கிய குற்றத்திற்காக கைதானது டிவியில் வருகிறது. அதை பார்த்து ஒட்டு மொத்த குடும்பமும் அதிர்ச்சியாகி நிற்கிறது.
ப்ரோமோ இதோ..
பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர், நடிகைகளின் முழு சம்பள விவரம்- அதிகம் வாங்குவது யார்?