கண்ணப்பா படத்தின் முதல் நாள் வசூல்.. எவ்வளவு தெரியுமா
கண்ணப்பா
இயக்குநர் முகேஷ் குமார் சிங் இயக்கத்தில் விஷ்ணு மஞ்சு நடிப்பில் உருவாகி வெளிவந்துள்ள திரைப்படம்தான் கண்ணப்பா.

நாத்திகராக இருந்து, பின் சிவாவின் தீவிர பக்தராக மாறும் கண்ணப்பரின் கதாபாத்திரத்தில் விஷ்ணு மஞ்சு நடித்துள்ளார். பிரபாஸ், மோகன்லால், அக்ஷய் குமார், காஜல் அகர்வால், சரத்குமார், ப்ரீத்தி முகுந்தன், மோகன் பாபு, மதுபாலா என பல நட்சத்திரங்கள் இப்படத்தில் நடித்துள்ளனர்.

வசூல் விவரம்
பிரம்மாண்ட பொருட் செலவில் உருவாகி நேற்று திரையரங்கில் வெளிவந்த இப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், விஷ்ணு மஞ்சுவின் கண்ணப்பா திரைப்படம் உலகளவில் முதல் நாள் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் உலகளவில் முதல் நாள் மட்டுமே ரூ. 15 கோடிக்கும் மேல் வசூலை அள்ளியுள்ளது. விஷ்ணு மஞ்சுவின் திரை வாழ்க்கையில் முதல் நாள் அதிக வசூல் செய்த திரைப்படமும் இதுவே ஆகும்.
நேட்டோ பிரதேசத்திற்குள் அத்துமீறிய ரஷ்யப் பாதுகாப்புப் படையினர்... அதிகரிக்கும் பதற்றம் News Lankasri
நள்ளிரவில் மாயமான பல்கலைக்கழக மாணவர்... நான்கு வாரங்களுக்குப்பிறகு தெரிய வந்த அதிர்ச்சி சம்பவம் News Lankasri