மீண்டும் நடிக்க வந்த வானத்தைப்போல துளசி! குஷியில் ரசிகர்கள்.. வைரல் வீடியோ
சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் முக்கிய சீரியல்களில் ஒன்று வானத்தைப்போல. இந்த தொடரில் துளசி - சின்ராசு ஆகிய அண்ணன் - தங்கையின் பாசத்தை சுற்றி தான் கதை இருக்கும். மிகப்பெரிய வரவேற்பை பெற்ற இந்த தொடரில் துளசி கேரக்டரில் ஆரம்பத்தில் நடித்தவர் ஸ்வேதா கால்கே.
அவர் திடீரென சீரியலில் இருந்து விலகியது ரசிகர்களுக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அவரை தொடர்ந்து சின்ராசு ரோலில் நடித்த தமன் வெளியேறினார். அதற்கு பிறகு தற்போது வேறு நடிகர்கள் அந்த ரோல்களில் நடித்து வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை ஸ்வேதா ரசிகர்களுக்கு ஒரு ஹாப்பி நியூஸ் வெளியாகி இருக்கிறது. அவர் தற்போது கலைஞர் டிவியில் கண்ணெதிரே தோன்றினாள் என்ற புது சீரியலில் ஹீரோயினாக நடிக்க தொடங்கி இருக்கிறார்.
அதன் ப்ரோமோ தற்போது வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. கேஜிஎப் பட புகழ் நடிகை மாளவிகா அவினாஷ் இந்த தொடரில் முக்கிய ரோலில் நடிக்கிறார்.