சிம்பு அடுத்து தொடங்கும் படம்.. ஹீரோயினாக முன்னணி நடிகை! யார் பாருங்க
தற்போது வெற்றிமாறன் இயக்கத்தில் அரசன் என்ற படத்தில் நடித்து வருகிறார் சிம்பு. அந்த படத்தின் ஷூட்டிங் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த படத்தை முடித்த பிறகு டிராகன் பட புகழ் அஸ்வத் மாரிமுத்து உடன் சிம்பு கூட்டணி சேர இருக்கிறார்.
அந்த படத்தினை பற்றி அறிவிப்பு வந்து நீண்ட காலம் ஆகிவிட்டாலும் ஷூட்டிங் எப்போது தொடங்கும் என்பது தெரியாமல் இருந்தது. அரசன் ஷூட்டிங் முடிந்ததும் அந்த படத்தை சிம்பு தொடங்குகிறாராம்.
இந்த படத்தின் கதை சுவாரஸ்யமானது, சொர்க்கம் பற்றிய கதை அது என இயக்குனரே ஒரு நிகழ்ச்சியில் கூறியிருந்தார். மேலும் படத்தில் பல ஹீரோயின்களும் நடிக்க போகிறார்கள் எனவும் அவர் கூறியிருந்தார்.
மேலும் நடிகர் சந்தானம் நீண்ட காலத்துக்கு பிறகு இந்த படத்தில் காமெடியனாக நடிக்கப் போகிறார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

ருக்மிணி வசந்த்
STR 51 படத்தில் நடிகை ருக்மிணி வசந்த் நடிக்க பேச்சுவார்த்தை நடந்து வருவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது.
காந்தாரா படத்தின் மூலமாக இந்தியா முழுவதும் பேசப்படும் நடிகையாக மாறியிருக்கும் ருக்மிணி வசந்த் சிம்பு ஜோடியாக நடிப்பது உறுதி ஆனால் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

ஈரான் ட்ரோன் தாக்குதலில் சிக்கிய மிகப்பெரிய எண்ணெய் கப்பல்: பதிலடியால் மிரள வைத்த ட்ரம்ப் News Lankasri
ஈரான் மீது குண்டுவீச்சு... பந்தயத்தில் 160,000 டொலர் சம்பாதித்த இஸ்ரேலிய இராணுவ அதிகாரி News Lankasri