பிரம்மாண்டமாக வெளியான காந்தாரா சாப்டர் 1 தமிழ்நாட்டில் மட்டும் செய்துள்ள வசூல்.. இவ்வளவா?
காந்தாரா
கடந்த ஆண்டு வெளிவந்து விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் எதிர்பார்க்காத மாபெரும் வெற்றியை பெற்ற திரைப்படம் காந்தாரா.
இப்படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடிக்க அஜ்னீஷ் லோகேஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ரூ. 15 கோடியில் தயாரான இப்படம் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது.
இதனால் 2ம் பாகம் தயாரானது, ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்துள்ளார். ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார்.
இவ்வளவா?
இந்நிலையில், தற்போது இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் ரூ. 11 கோடி வசூல் செய்துள்ளது என்று கூறப்படுகிறது.