காந்தாரா Chapter 1 படம் முதல் நாளில் எவ்வளவு வசூலிக்கும்... கணிக்கப்பட்ட விவரம்
காந்தாரா
தமிழ் சினிமாவில் நேற்று அக்டோபர் 1, தனுஷ் இயக்கி, நடித்துள்ள இட்லி கடை படம் வெளியானது.
பா.பாண்டி படத்திற்கு பிறகு தனுஷ் இயக்கிய தரமான படம் இது, மிகவும் எமோஷ்னலாக உள்ளது என நல்ல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அப்படத்தை தொடர்ந்து இன்று அக்டோபர் 2, தமிழில் வெளியாகியுள்ள படம் காந்தாரா சாப்டர் 1.
கன்னடத்தில் தயாராகி பல மொழிகளில் இப்படம் வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் நாயகியாக ருக்மனி வசந்த் நடித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 125 கோடி பட்ஜெட்டில் தயாராகியுள்ள இப்படத்தின் மீது படக்குழுவிற்கு பெரிய நம்பிக்கை உள்ளது.
முதல் பாகத்தை போல இந்த 2ம் பாகம் பாக்ஸ் ஆபிஸில் பெரிய சாதனை படைக்கும் என எதிர்ப்பார்க்கின்றனர். இந்த நிலையில் காந்தாரா Chapter 1 படம் முதல் நாளில் ரூ. 75 கோடிக்கு மேல் வசூலிக்கும் என கணிக்கப்படுகிறது.