5 நாட்களில் உலகளவில் காந்தாரா சாப்டர் 1 செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காந்தாரா 1
கன்னட சினிமாவிற்கு பெருமை சேர்த்த திரைப்படங்களில் ஒன்று காந்தாரா. கடந்த 2022ஆம் ஆண்டு இப்படம் வெளிவந்து ப்ளாக்பஸ்டர் வெற்றியடைந்தது. இதை தொடர்ந்து தற்போது காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது.

நடிகர் ரிஷப் ஷெட்டி இயக்கி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் ருக்மிணி வசந்த் கதாநாயகியாக நடித்துள்ளனர். கடந்த வாரம் இப்படம் திரைக்கு வந்து, ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது.
வசூல் விவரம்
ஒவ்வொரு திரைப்படம் வெளிவரும்போதும் அப்படம் குறித்த வசூல் விவரங்களை நாம் தொடர்ந்து பார்த்து வருவோம். அந்த வகையில் ஐந்து நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் காந்தாரா சாப்டர் 1 படம், உலகளவில் இதுவரை செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, இப்படம் ஐந்து நாட்களில் உலகளவில் ரூ. 380+ கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் ரூ. 500 கோடி வசூல் செய்து பாக்ஸ் ஆபிஸ் சாதனை படைக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    