மிகப்பெரிய வரவேற்பு பெறும் காந்தாரா Chapter 1... முதல்நாள் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?
காந்தாரா Chapter 1
கடந்த 2022ம் ஆண்டு ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்த கன்னட படம் காந்தாரா.
அங்கு மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்ற இப்படத்தில் சப்தமி கவுடா, கிஷோர் உள்ளிட்ட பலரும் நடிக்க அஜ்னீஷ் லோகேஷ் இசையமைத்திருந்தார். இந்தப் படம் நல்ல வரவேற்பைப் பெற்றதால் தென்னிந்திய மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது.
ரூ. 15 கோடியில் தயாரான இப்படம் உலக அளவில் ரூ. 400 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. இதனால் 2ம் பாகம் தயாரானது, ரிஷப் ஷெட்டியே இயக்கி நடித்துள்ளார்.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 100 கோடிக்கும் அதிகமான பட்ஜெட்டில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள இப்படத்தில் நாயகியாக ருக்மிணி வசந்த் நடித்திருந்தார்.
தமிழகத்தில் மட்டுமே முதல் நாளில் ரூ. 6 கோடிக்கு மேல் வசூலித்த இப்படம் மொத்தமாக முதல் நாளில் ரூ. 75 கோடிக்கும் அதிகமான கலெக்ஷனை செய்துள்ளதாம்.
தொடர்ந்து விடுமுறை நாட்களாக இருப்பதாலும், வரவேற்பாலும், காட்சிகளும் திரையரங்குகளில் அதிகரிக்கப்பட்டுள்ளன.