தமிழகத்தில் முதல் நாளில் காந்தாரா Chapter 1 செய்த வசூல் எவ்வளவு தெரியுமா?
காந்தாரா
கன்னட சினிமாவில் பெரிய பட்ஜெட்டில் தயாராகி சமீபத்தில் வெளியாகியுள்ள திரைப்படம் காந்தாரா Chapter 1.
ஹோம்பாலே நிறுவனம் தயாரிக்க ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். முதல் பாகத்தை போல இதற்கும் விமர்சனங்கள் அமோகமாக வந்துள்ளது.
ஒரே நாளில் 1 மில்லியன் டிக்கெட்டுகள் புக் மை ஷோவில் புக் ஆகி சாதனை படைத்துள்ளது.
பாக்ஸ் ஆபிஸ்
ரூ. 15 கோடி பட்ஜெட்டில் உருவாக்கப்பட்ட காந்தாரா ரூ. 400 கோடிக்கு மேல் வசூல் செய்து மாபெரும் வெற்றியை பெற்றது.
இதனால் காந்தாரா Chapter 1 மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உருவானது. பெரிய எதிர்ப்பார்ப்பில் இருந்த இப்படம் வெளியாகி ரசிகர்களை ஈர்த்து வருவதாக தெரிகிறது.
முதல் நாளில் இப்படம் தமிழகத்தில் மட்டுமே ரூ. 6 கோடிக்கு மேல் வசூல் வேட்டை நடத்தியுள்ளதாக கூறப்படுகிறது.