உலகளவில் 6 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காந்தாரா
காந்தாரா சாப்டர் 1 உலகளவில் நல்ல வரவேற்பை பெற்று பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடைபோட்டு வருகிறது. கன்னட திரையுலகிற்கு பெருமை சேர்த்த திரைப்படங்களில் ஒன்று காந்தாரா.
கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த இப்படம் மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்றது. இதை தொடர்ந்து இதனுடைய அடுத்த பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவாகி, கடந்த வாரம் திரைக்கு வந்தது.

ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்திருந்த இப்படத்தில் அவருடன் இணைந்து ரசிகர்களின் மனம் கவர்ந்த நாயகியாக இருக்கும் ருக்மிணி வசந்த் நடித்திருந்தார். காந்தாரா படத்தை காட்டிலும் காந்தாரா சாப்டர் 1 பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்கப்பட்டிருந்தது.
வசூல்
இந்நிலையில், 6 நாட்களை பாக்ஸ் ஆபிஸில் கடந்திருக்கும் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, 6 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 உலகளவில் ரூ. 415 கோடி வசூல் செய்துள்ளது. இன்னும் ஓரிரு நாட்களில் ரூ. 500 கோடியை கடந்துவிடும் என திரை வட்டாரத்தில் கூறப்படுகிறது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    