10 நாட்களில் காந்தாரா சாப்டர் 1 உலகளவில் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
காந்தாரா
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாகி கடந்த வாரம் திரைக்கு வந்த படம் காந்தாரா சாப்டர் 1. முன்னணி நடிகர் ரிஷப் இயக்கி நடித்திருந்த இப்படத்தை Hombale பிலிம்ஸ் தயாரித்திருந்தது.
இப்படத்தில் ருக்மிணி வசந்த், குல்ஷன் மற்றும் ஜெயராம் ஆகியோர் நடித்திருந்தனர். உலகளவில் ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸ்
முதல் நாளில் இருந்தே வசூலில் பட்டையை கிளப்பி வரும் காந்தாரா படம் 10 நாட்களாக பாக்ஸ் ஆபிஸில் வெற்றிநடை போட்டு வருகிறது. இந்த நிலையில், 10 நாட்களில் இப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி, 10 நாட்களில் உலகளவில் ரூ. 575+ கோடி வசூல் செய்துள்ளது. விரைவில் கன்னட திரையுலகில் மாபெரும் வசூல் சாதனை படைக்கும் படமாக காந்தாரா சாப்டர் 1 மாறும் என ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.