ரூ. 700 கோடி வசூலை நோக்கி காந்தாரா Chapter 1 படம்.. மொத்த வசூல் எவ்வளவு பாருங்க
காந்தாரா சாப்டர் 1
கடந்த 2022ம் ஆண்டு கன்னடத்தில் உருவான காந்தாரா திரைப்படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி மொழிகளில் டப் செய்யப்பட்டு வெளியாக சூப்பர் ஹிட் அடித்தது.
முதல் பாகம் அமோக வெற்றியடைய ஆயுதபூஜை ஸ்பெஷலாக 3 வருடங்கள் கழிந்து காந்தாரா சாப்டர் 1 வெளியாகியுள்ளது. ரிஷப் ஷெட்டியே இயக்கி, நடித்துள்ள இப்படத்தில் ருக்மணி வசந்த், ஜெயராம் உள்ளிட்ட பலரும் நடித்திருக்கிறார்கள்.
கடந்த அக்டோபர் 2ம் தேதி உலகம் முழுவதும் வெளியான இப்படத்திற்கு பாசிட்டீவ் விமர்சனங்கள் வந்தது, குறிப்பாக VFX மற்றும் ஆக்ஷன் காட்சிகள் ரசிகர்களிடம் பெரும் வரவேற்பை பெற்றது.
பாக்ஸ் ஆபிஸ்
கதை தான் முக்கியம், மொழி பிரச்சனை இல்லை என்பதை காட்டும் வகையில் நிறைய பிற மொழி படங்கள் வெற்றி கண்டன. அதில் காந்தாரா சாப்டர் 1 படமும் இடம்பெற்றுள்ளது.
இந்தியா, வெளிநாடு என எல்லா இடத்திலும் படத்திற்கு செம ரெஸ்பான்ஸ். 14 நாட்கள் முடிவில் இப்படம் மொத்தமாக ரூ. 698 கோடி வசூலிக்க ரூ. 700 கோடி வசூலை நோக்கி சென்றுகொண்டிருக்கிறது.

கிட்னிகள் ஜாக்கிரதை பேட்ஜை அணிந்து வந்த அதிமுக எம்எல்ஏக்கள் - சட்டமன்றத்தில் சலசலப்பு! IBC Tamilnadu

உலகில் பரவும் மர்ம வியாதி... தொற்றுநோய் அச்சுறுத்தலை அறிவித்த நாடு: அதிகரிக்கும் எண்ணிக்கை News Lankasri

பெற்றோரையே வீட்டில் சேர்க்காத விஜய்; அவரது சுபாவமே அதுதான் - நெப்போலியன் கடும் விமர்சனம் News Lankasri
