8 நாட்களில் உலகளவில் காந்தாரா சாப்டர் 1 படம் செய்துள்ள வசூல், எவ்வளவு தெரியுமா?
காந்தாரா
பிரம்மாண்ட பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு, ரசிகர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு கடந்த வாரம் வெளிவந்த படம் காந்தாரா சாப்டர் 1.

கன்னட திரையுலகிற்கு பெருமை சேர்த்த திரைப்படங்களில் காந்தாராவும் ஒன்று. 2022ல் வெளிவந்த காந்தாரா மாபெரும் வெற்றியடைந்த நிலையில், அதனுடைய அடுத்த பாகமாக காந்தாரா சாப்டர் 1 உருவாகி வெளிவந்துள்ளது.

இப்படத்தை ரிஷப் ஷெட்டி இயக்கி நடித்துள்ளார். ருக்மிணி வசந்த் இப்படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார்.
வசூல்
அக்டோபர் 2ஆம் தேதி திரைக்கு வந்த இப்படம் இன்றுடன் 8 நாட்களை வெற்றிகரமாக பாக்ஸ் ஆபிஸில் கடந்துள்ளது.

இந்நிலையில், 8 நாட்களில் இப்படம் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 8 நாட்களில் உலகளவில் ரூ. 475+ கோடி வசூல் செய்துள்ளது.
 
                 
                 
                                             
         
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
     
    