100 கோடிக்கும் மேல் வசூலித்த காந்தாரா பட்ஜெட் இவ்வளவு தானா?
காந்தாரா
கன்னட படங்கள் சமீப காலமாக இந்திய அளவில் வரவேற்பை பெற தொடங்கி இருக்கின்றன. கேஜிஎப் படத்தை தொடர்ந்து தற்போது காந்தாரா படம் வசூலில் சாதனை படைத்து வருகிறது.
தனுஷ், கார்த்தி, அனுஷ்கா உள்ளிட்ட பல சினிமா பிரபலங்கள் இந்த படத்தை வெளிப்படையாகவே புகழ்ந்து வருகின்றனர்.
காந்தாரா தற்போது 100 கோடிக்கும் அதிகமாக தயாரிப்பாளருக்கு லாபம் கொடுத்து இருக்கிறது. 4 மொழிகளிலும் வந்த வசூலை சேர்த்து 150 கோடிக்கும் அதிகமாக க்ராஸ் வசூல் செய்திருக்கிறது காந்தாரா.
பட்ஜெட் எவ்வளவு
இந்த படத்தின் பட்ஜெட் வெறும் 15 கோடி மட்டும் தான் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது வரும் வசூலை பார்த்தால் காந்தாரா தயாரிப்பாளருக்கு 10 மடங்கு லாபம் ஈட்டி தரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
கேஜிஎப் படத்தை தயாரித்த Hombale பிலிம்ஸ் நிறுவனம் தான் இந்த படத்தை தயாரித்து இருக்கிறது. கேஜிஎப் போலவே காந்தாரா மூலமாக மிகப்பெரிய லாபத்தை அந்த நிறுவனம் பெற்றிருக்கிறது.