காந்தாரா சாப்டர் 1 படத்திற்காக ரிஷப் மற்றும் ருக்மிணி வாங்கிய சம்பளம்.. இத்தனை கோடியா?
காந்தாரா சாப்டர் 1
கன்னடத்தில் வெளியான சப்த சாகரதாச்சே எலோ படத்தின் மூலம் தென்னிந்திய அளவில் பிரபலமானவர் நடிகை ருக்மிணி வசந்த்.
இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து தமிழில் எண்ட்ரி கொடுத்த இவர், ஏஸ் மற்றும் மதராஸி என இரு திரைப்படங்களில் இரு முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துவிட்டார்.
ருக்மிணி வசந்த் நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த திரைப்படம் காந்தாரா சாப்டர் 1. இப்படத்தை இயக்கி ஹீரோவாக நடித்துள்ளார் ரிஷப் ஷெட்டி.
கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்து மாபெரும் வெற்றியடைந்த காந்தாரா படத்தின் Prequel-ஆக இப்படம் வெளியானது.
எவ்வளவு தெரியுமா?
இந்நிலையில், காந்தாரா படத்தில் நடித்த ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த் என சிலரின் சம்பளம் குறித்து தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, ரிஷப் ஷெட்டி முதல் பாகத்தில் ரூ.4 கோடி மட்டுமே பெற்றார் இந்த முறை, லாபத்தில் ஒரு பங்கை வாங்க திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.
மேலும், ரிஷப் ஷெட்டி, ருக்மிணி வசந்த், ஜெயராம், மற்றும் குல்ஷன் தேவையா ஆகியோருக்கு தலா ரூ.2 கோடி வரை சம்பளம் வழங்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.