போதையில் ஒரு ட்விட் போட்டு 9 லட்சத்தை தண்டம் வைத்த ஸ்டாண்டப் காமெடியன்
ஒரு ட்விட் போட்டுவிட்டு அதற்காக 9 லட்சம் ரூபாயை தண்டமாக செலவு செய்த டிவி பிரபலம் பற்றி உங்களுக்கு தெரியுமா. பிரபல ஹிந்தி காமெடியன் கபில் சர்மா தான் அது.
அவரது "Kapil sharma: I m not done yet" என்ற ஷோ தற்போது நெட்பிலிக்ஸ் தளத்தில் வெளிவந்து இருக்கிறது. அதில் அவர் தான் பிரதமர் மோடியை டேக் செய்து போட்ட ட்விட் பற்றி பேசி இருக்கிறார்.
குடித்துவிட்டு போதையில் தான் அந்த ட்விட் பதிவிட்டேன். அதற்கு பிறகு நான் உடனேயே மாலத்தீவிற்கு கிளம்பிவிட்டேன். அங்கே சென்று எனக்கு இன்டர்நெட் இல்லாத ஒரு அறை வேண்டும் என கேட்டேன். 'திருமணம் ஆனதும் வந்திருக்கிறீர்களா' என கேட்டார்கள். நான் ட்விட் செய்துவிட்டு வந்திருக்கிறேன் என சொன்னேன். அங்கு எட்டு ஒன்பது நாட்கள் மட்டுமே இருந்தேன். அதற்காக 9 லட்சம் பில் ஆனது.
என்னுடைய மொத்த படிப்புக்கு கூட நான் அந்த அளவுக்கு செலவு செய்யவில்லை. ஒரு ட்விட் போட்டு 9 லட்சம் தண்டமாக செலவு செய்தேன் என கபில் சர்மா குறிப்பிட்டு இருக்கிறார்.