விஜய் படத்திற்கு நோ சொன்ன சல்மான் கான்! என்ன காரணம் தெரியுமா?
நடிகர்கள் விஜய் மற்றும் விஜய் சேதுபதி நடிப்பில் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஜனவரி மாதம் வெளியான திரைப்படம் மாஸ்டர்.
திரையரங்கில் வெளியான இப்படம் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றியடைந்தது.
மேலும் இந்தியில் ரீமேக்காக இருந்த மாஸ்டர் படத்தில் நடிகர் விஜய்யின் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்க உள்ளதாக கூறப்பட்டது.
இதனிடையே மாஸ்டர் படத்தின் கதையை இந்திக்கு ஏற்றவகையில் மாற்றினால் மட்டுமே சல்மான் கான் நடிக்க சம்மதம் தெரிவித்து இருந்தாராம்.
மேலும் அவருக்கு ஏற்றவகையில் மாற்றியமைக்கப்பட்ட கதை படித்த சல்மான் கான், அது அவருக்கு திருப்தியாக இல்லை என கூறிவிட்டாராம்.
அடுத்தடுத்து அவர் 3 திரைப்படங்களில் நடிக்கவுள்ளதால் மாஸ்டர் படத்தின் ஹிந்தி ரீமேக்கில் இருந்து விலகியுள்ளதாக கூறப்படுகிறது.