2 நாட்களில் கர திரைப்படம் செய்துள்ள வசூல்.. எவ்வளவு தெரியுமா
கர
2023ஆம் ஆண்டு தமிழ் சினிமாவிற்கு மாபெரும் வெற்றியை தேடி தந்த திரைப்படம் போர் தொழில். இப்படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் விக்னேஷ் ராஜா.

முதல் படத்திலேயே ஒட்டுமொத்த திரையுலகத்தை திரும்பி பார்க்க வைத்த இவர், தனது இரண்டாவது திரைப்படத்திற்காக தனுஷுடன் கைகோர்த்தார்.

தன்னம்பிக்கையால் சினிமாவின் உச்ச நட்சத்திரமான அஜித்.. அவருடைய டாப் 10 வசூல் திரைப்படங்கள், லிஸ்ட் இதோ
விக்னேஷ் ராஜா இயக்கத்தில் வேல்ஸ் நிறுவனம் தயாரிப்பில் உருவான கர திரைப்படத்தில் தனுஷுடன் இணைந்து மமிதா பைஜு, சுராஜ், ஜெயராம், பிரித்வி, கருணாஸ் என பலரும் நடித்திருந்தனர்.
வசூல்
வித்தியாசமான கதைக்களத்தில் உருவாகி வெளிவந்த கர திரைப்படம் ரசிகர்கள் எதிர்பார்ப்பை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை; இதனால் கலவையான விமர்சனங்களை சந்தித்துள்ளது.

இந்த நிலையில், 2 நாட்களில் கர திரைப்படம் உலகளவில் செய்துள்ள வசூல் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, 2 நாட்களில் உலகளவில் இப்படம் ரூ. 15 கோடிக்கும் மேல் பாக்ஸ் ஆபிஸில் வசூல் செய்துள்ளது.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri