தனுஷின் 'கர' திரைப்படத்தின் முதல் விமர்சனம்.. படம் எப்படி இருக்கு தெரியுமா?
கர
தமிழ் சினிமாவில் தனது பயணத்தை தொடங்கி இன்று ஹாலிவுட் வரை தனது காலத்தடத்தை பதித்துள்ளார் நடிகர் தனுஷ். இவர் நடிப்பில் கடந்த ஆண்டு வெளிவந்த தேரே இஷ்க் மே திரைப்படம் ஓரளவு நல்ல வரவேற்பை பெற்றது.

இதை தொடர்ந்து தனுஷ் நடிப்பில் வருகிற 30ஆம் தேதி வெளிவரவிருக்கும் திரைப்படம் 'கர'. இப்படத்தை இயக்குநர் விக்னேஷ் ராஜா இயக்க, மமிதா பைஜூ கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் இணைந்து கே.எஸ். ரவிக்குமார், சுராஜ், கருணாஸ் ஆகியோர் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

முதல் விமர்சனம்
'கர' திரைப்படத்தை சமீபத்தில் பார்த்துவிட்டு, இயக்குநர் விக்னேஷ் ராஜாவுக்கு தனது நன்றிகளை தனுஷ் தெரிவித்திருந்தார். அவருடைய அந்த பதிவு இணையத்தில் வைரலானது. இந்த நிலையில், பெரும் எதிர்பார்ப்புடன் 'கர' திரைப்படம் வெளிவரவுள்ள நிலையில், படத்தின் முதல் விமர்சனம் வெளியாகியுள்ளது.

தமிழ்நாடு திரையரங்க சங்க செயலாளர் திருச்சி ஸ்ரீதர் தனது எக்ஸ் தளத்தில் 'கர' படம் எப்படி உள்ளது என்று பதிவிட்டுள்ளார். இந்த பதிவில், "பிரமாதமான முதல் பாதி, ஓகே-வான இரண்டாம் பாதி. தனுஷ் ரசிகர்களுக்கு சூப்பர் என்டர்டைன்மெண்ட். கே.எஸ். ரவிக்குமார் மற்றும் கருணாஸின் நடிப்பு சிறப்பு. மேபி(Maybe) பிளாக் பஸ்டர்" என தெரிவித்துள்ளார். மேலும் இது வெளிநாட்டு சோர்ஸ் என்றும் அவர் அதில் குறிப்பிட்டுள்ளார்.
