கர திரைவிமர்சனம்

By Tony Apr 30, 2026 07:30 AM GMT
Report

போர் தொழில் என்கிற பிளாக்பஸ்டர் படத்தை கொடுத்தவர் விக்னேஷ் ராஜா. இவர் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியிருக்கும் திரைப்படம் கர. இப்படத்தில் மமிதா பைஜு, கே.எஸ். ரவிக்குமார், ஜெயராம், சுராஜ், கருணாஸ் என பலரும் நடித்துள்ளனர். முதல் படத்திலேயே தமிழ் சினிமாவை திரும்பி பார்க்க வைத்த இயக்குநர் விக்னேஷ் ராஜா, கர படத்தில் நம் அனைவரையும் மீண்டும் ஆச்சரியப்படுத்தியுள்ளாரா என்பதை விமர்சனத்தில் பார்க்கலாம்.

கர திரைவிமர்சனம் | Kara Movie Review

கதைக்களம்

தனுஷ், ப்ரித்வி இரண்டு பேருமே படத்தின் முதல் காட்சியிலேயே இரு MLA வீட்டை திருட செல்கின்றனர். அதில் தனுஷ் மட்டும் மாட்டுகிறார், அவர் மாட்டும் ஸ்டேஷனில் உயர் அதிகாரியாக இருக்கும் சுராஜ் தனுஷ் மீது நிறைய கேஸ்களை போட்டு தனக்கு பப்ளிச்சிட்டி கிடைக்க வேண்டும் என எண்ணுகிறார்.

இதை அறிந்த தனுஷ் சுராஜை அடித்து, அங்கிருந்து தப்பித்து ரேணிகுண்டா சென்று மமிதா பைஜுவுடன் வாழ்ந்து வருகிறார், ஆனால் கஷ்டம் அவரை விட்டு வைக்கவில்லை, இதனால் மெஸ் ஆரம்பிக்க முடிவு செய்கிறார்.

கர திரைவிமர்சனம் | Kara Movie Review

இதனால் தன் சொந்த ஊருக்கு வந்து தன் அப்பா கே எஸ் ரவிகுமாரிடம் நிலத்தை விற்று பணத்தை கேட்க, பிறகு தான் தெரிகிறது, அவரே நிலத்தை வங்கியில் அடமானம் வைத்து தான் ட்ராக்டர் வாங்கியுள்ளார் என்பது.

ஒரு கட்டத்தில் வாங்கிய கடனுக்காக நிலத்தை பேங்க் ஜப்தி செய்ய, கே எஸ் ரவிகுமார் இறந்து போக, தன் அப்பாவை தன்னுடைய நிலத்தில் அடக்கம் செய்ய வங்கி மறுக்க, இப்படி எல்லா திசைகளிலும் தனுஷை சூழ்நிலைகள் நெருக்க, பிறகு தனுஷ் எடுக்கும் அதிரடி முடிவுகளே மீதிக்கதை.

கர திரைவிமர்சனம் | Kara Movie Review

படத்தை பற்றிய அலசல்

தனுஷ் கர சாமியாக வாழ்ந்து உள்ளார், சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடி போய், வாழ்க்கையிலும் ஜெயிக்காமல், தவறான வழியில் சம்பாதித்து பிழைப்பை ஓட்டி, மீண்டும் தன் அப்பாவிடமே வந்து நின்று கலங்குவது, பிறகு தன் அப்பாவே இறந்து போக அவருக்காக களத்தில் இறங்குவது என வழக்கம் போல எமோஷ்னல், ஆக்‌ஷன் என கலக்கியுள்ளார். 

கே எஸ் ரவிகுமார் அட அவர் தானா இது என்பது போல் தனுஷ் தந்தையாக அத்தனை யதார்த்தம், கருணாஸ், ப்ரித்வி என அனைவருமே சிறப்பான நடிப்பை தந்துள்ளனர். சுராஜ் எப்படா நீ மாட்டுவா என பல வருடம் காத்திருந்து தனுஷை பிடிக்க அவரும் களம் இறங்கும் காட்சி சூப்பர் ஸ்டோரி டெல்லிங். 

கர திரைவிமர்சனம் | Kara Movie Review

படத்தின் முதல் பாதி, பேங்க் ஹெசிட் ஆரம்பிக்கும் வரை எமோஷ்னல் ட்ராமாவாகவே செல்கிறது. இவை எந்த அளவிற்கு கமர்ஷியல் ஆடியன்ஸை கவரும் என்று சொல்ல முடியவில்லை, ஏனெனில் அத்தனை மெதுவாகவே நகர்கிறது, தனுஷ் திருடன் என்பதால் அவர் பக்கம் நியாயத்தை காட்ட இயக்குனர் முதல் ஒரு மணி நேரம் முயற்சித்துள்ளது எல்லோருக்கும் கனேக்ட் ஆகுமா தெரியவில்லை.

முதல் பாதி பொறுமையாவே செல்ல, பேங்-யை கொள்ளையடிக்க தனுஷ், ப்ரித்வி, கருணாஸ் போடும் திட்டம், அதை தொடர்ந்து பேங்-ல் நுழைந்து அங்கு ஆடுகளம் நரேன் வரும் காட்சி எல்லாம் நான் ஸ்டார் விசில் பறக்கும் சீன்கள் தான்.  

கர திரைவிமர்சனம் | Kara Movie Review

Michael திரை விமர்சனம்

Michael திரை விமர்சனம்

இரண்டாம் பாதி அடுத்தடுத்து பேங்க் கொள்ளை காட்சி ஜெயராம் போடும் ஸ்கெட், சுராஜின் தேடல், இதிலிருந்து தனுஷ் எப்படி தப்பித்து தன் கடமையை செய்து முடித்தால் என விறுவிறுவென கொண்டு சென்றுள்ளனர். ஆனால். லாஜிக் என் பார்க்க முடியவில்லை, போர் தொழிலில் இருந்த ஒரு யதார்த்தம் இந்த கர படத்தில் களத்தில் காட்சிகளில் இல்லை. சூப்பர் ஹீரோ போல் மக்கள் நாயகன் மக்களுக்காக போராடுபவர், படம் போல் கிளைமேக்ஸ் கொண்டு சென்றது நன்றாக இருந்தாலும் போர் தொழில் இயக்குனரிடமிருந்து கொஞ்சம் ஏமாற்றமாக இருந்தது.

தற்போது நடக்கும் போர் அதன் விளைவுகளை 1990 களிலேயே மக்கள் சந்தித்தது, படிப்பறிவு இல்லாத மக்களை எப்படி லோன் கொடுப்பவர்கள் ஏமாற்றுகிறார்கள், தேவர் மகன் படத்தின் ஷுட்டிங்கை காட்டிய விதம் கவனம் ஈர்க்கிறது.

கர திரைவிமர்சனம் | Kara Movie Review

டெக்னிக்கலாக கேமரா ஒர்க் 1990-ல் நடப்பது என்பதால் செட் பல காட்சிகள் என்றாலும், அதை ரியல் ஆக படம் பிடித்து காட்டியுள்ளனர். ஜிவி இசை பாடல்கள் பின்னணி இசை பல படத்தில் கேட்டது போலவே உள்ளது. 

க்ளாப்ஸ்

தனுஷ் மற்றும் நடிகர்கள் பங்களிப்பு

இரண்டாம் பாதி மற்றும் பேங்க் கொள்ளை சம்பந்தப்பட்ட காட்சிகள்.

பல்ப்ஸ்

படம் ஆரம்பித்த 45 நிமிடம் கதைக்கு தேவை என்றாலும் மிக பொறுமையாக நகரும் காட்சிகள்.

திரைக்கதை பெரிய திருப்பம் இன்றி கமர்ஷியல் நாயகர்கள் படம் போல் கொண்டு சென்றது.

மொத்தத்தில் கர குறைகள் அங்கங்கு இருந்தாலும் மக்களுக்கான இந்த போராட்டத்தில் தடுமாறி வெற்றியை பெறுகிறார்.

கர திரைவிமர்சனம் | Kara Movie Review

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US