சென்சேஷன் ஹிட்டான தமிழ் படத்தின் ஹிந்தி ரீமேக்.. கரண் ஜோகரின் அடுத்த அதிரடி
பாலிவுட்டின் பிரபல இயக்குனர்களில் ஒருவரும் Coffee with Karan என்னும் பெயர்போன ரியாலிட்டி நிகழ்ச்சியின் தொகுப்பாளருமான கரண் ஜோஹர் ஹிந்தியின் பல முன்னனி ஹீரோக்களுடன் சேர்ந்து பல ஹிட் படங்களை இயக்கியிருக்கிறார்.
சில வேற்று மொழி படங்களையும் ஹிந்தியில் இயக்கியும் தயாரித்தும் வழங்கியிருக்கிறார். அந்த வரிசையில் தமிழில் கடந்த 2018-ம் ஆண்டு நடிகர் கதிர், ஆனந்தி நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கி பா.ரஞ்சித் தயாரித்து வழங்கிய படம் தான் பரியேறும் பெருமாள்.
படம் வெளியாகி மாபெரும் வெற்றியடைந்து பல விருதுகளையும் வென்றது. இந்த நிலையில் பரியேறும் பெருமாள் படத்தை ஹிந்தியில் ரீமேக் செய்யும் உரிமையை இயக்குனர் கரண் ஜோஹர் வாங்கியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
படத்தை அவரது சொந்த தயாரிப்பு நிறுவனமான நீளம் ப்ரோடக்ஷன்ஸ் தயாரிக்கும் எனவும் கூறப்படுகிறது. கரண் ஜோஹர் மற்ற மொழிகளில் இருந்து சில படங்களை இதற்கு முன்பு ஹிந்தியில் ரீமேக் செய்திருந்தாலும் தமிழ் படத்தை அவர் ரீமேக் செய்வது இதுவே முதன் முறை ஆகும்.