இந்தியாவை சூறையாடியவர்களின் பெயரை மகன்களுக்கு வைப்பதா ! கரீனா கபூரை விளாசும் பேன்ஸ்
பாலிவுட் திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகை தான் நடிகை கரீனா கபூர், இவர் அங்கு பல முன்னணி நடிகர்களின் படத்தில் ஜோடியாக நடித்துள்ளார்.
பிரபல பாலிவுட் நடிகர் சைஃப் அலி கானின் இரண்டாவது மனைவியான கரீனா கபூர் 2016ம் ஆண்டு ஆண் குழந்தையை பெற்றெடுத்தார். அந்த குழந்தைக்கு தைமூர் என அவர் பெயர் வைத்த போதே ஏகப்பட்ட சர்ச்சைகள் உருவானது.
இந்நிலையில், இரண்டாவது குழந்தை பிறந்துள்ள நிலையில், அந்த குழந்தைக்கு ஜெகாங்கீர் என கரீனா கபூர் பெயர் சூட்டி இருப்பது மேலும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.
தைமூர், ஜெகாங்கீர் என இந்தியாவை ஆக்கிரமித்து பல அக்கிரமங்களை செய்த இரண்டு முகலாய மன்னர்களின் பெயரை வைத்துள்ளதாகவும், திட்டமிட்ட கரீனா கபூர் இதை செய்துள்ளதாகவும் இணையத்தில் ரசிகர்கள் அவரை விமர்சித்து வருகின்றனர்.
ஆனால் கரீனா கபூர் அவர் அளித்திருந்த பேட்டி ஒன்றில் இரண்டாவது மகனின் பெயர் 'Jeh Ali Khan' என தெரிவித்துள்ளார்.
ராகு-கேதுவுக்கு இடையில் 7 கிரகங்கள் : அரிதான கிரகச் சேர்க்கையால் சிக்கலில் சிக்கப்போகும் 3 ராசிகள்! Manithan
நகை வாங்குவோருக்கு மகிழ்ச்சி செய்தி! தங்கம் விலை அதிரடி சரிவு...இன்று ஒரு சவரன் எவ்வளவு? IBC Tamilnadu