அன்று School Fees கட்டமுடியாமல் தவித்த நடிகை.. இன்று 500 கோடிக்கு சொந்தக்காரி! கணவரிடம் ரூ. 1300 கோடி சொத்து
தனது சிறு வயதில் School Fees கட்டமுடியாமல் தவித்த நடிகை, இன்று ரூ. 800 கோடி மதிப்புள்ள பங்களாவில் வசித்து வருகிறார். அவரை பற்றி இந்த பதிவில் பார்க்கலாம் வாங்க. நடித்துள்ளார்.
2000ம் ஆண்டு தனது திரை பயணத்தை துவங்கிய இந்த நடிகை, முன்னணி நட்சத்திரங்களான ஷாருக்கான், சல்மான் கான், ஃசைப் அலிகான் உள்ளிட்ட பலருடன் இணைந்து நடித்திருக்கிறார்.
25 ஆண்டுகளாக சினிமாவில் வலம் வரும் இவர், நடிகர் ஃசைப் அலிகானை காதலித்து திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு இரு பிள்ளைகளும் உள்ளனர். அந்த நடிகை வேறு யாருமில்லை நடிகை கரீனா கபூர்தான்.
கரீனா கபூர்
2000 ஆண்டில் ரெப்யுஜீ என்ற படத்தில் அறிமுகமாகிய கரீனா, அடுத்தடுத்த வெற்றிப்படங்களை கொடுத்து பிரபலமானார். அவரது மூத்த சகோதரி கரிஷ்மா ஆவார். சமீபத்தில் கரீனாவின் தந்தை ரந்திரி அளித்த பேட்டியில், இரு மகள்களின் பள்ளிக்கட்டணத்தை கூட கட்டமுடியாமல் கஷ்டப்பட்டதாக தெரிவித்தார்.
அதை தொடர்ந்து பேசிய கரீனா கபூர், நாங்கள் பாரம்பரிய திரையுலக குடும்பத்தை சேர்ந்தவராக இருந்தாலும், ஒருசமயத்தில் வறுமையில் இருந்தோம். அப்போது என் சகோதரி கரிஷ்மா லோக்கல் டிரைன் மற்றும் பேருந்துகளில் தான் கல்லூரிக்கு செல்வார். அப்போது பொருளாதார சிக்கலில் இருந்தோம் என்று தெரிவித்தார்.
சொத்து மதிப்பு
அப்போது கஷ்டத்தில் இருந்த கரீனா கபூர், இன்று ரூ. 800 கோடி மதிப்பில் இருக்கும் பங்களாவில் வாழ்ந்து வருகிறார். கரீனா கபூரின் சொத்து மதிப்பு ரூ. 400 முதல் 500 கோடி வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. மேலும் இவரது கணவர்சைஃப் அலிகானின் சொத்து மதிப்பு ரூ. 1300 கோடி என தகவல் தெரிவிக்கின்றனர்.

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri
