ரயிலில் இருந்து குதித்த நடிகை.. மருத்துவமனையில் தீவிர சிகிச்சை
ஹிந்தியில் ராகினி எம்எம்எஸ் ரிட்டர்ன்ஸ், பியார் கா பஞ்ச்னாமா போன்ற படங்களில் நடித்து பிரபலம் ஆனவர் கரிஷ்மா சர்மா.
அவர் மும்பையில் ரயிலில் சென்றபோது கீழே குதித்ததில் காயம் அடைந்து தற்போது மருத்துவமனையில் சிகிச்சையில் இருக்கிறார்.
அந்த விபத்து நடந்தது எப்படி என நடிகை விளக்கம் கொடுத்து இருக்கிறார்.
குதித்துவிட்டேன்
"சர்ச் கேட் பகுதியில் நடக்க இருந்த ஷூட்டிங்கிற்காக நான் கிளம்பி சென்றேன். சேலையில் கிளம்பிய நான் ரயிலில் செல்ல முடிவெடுத்தேன். "
"நான் ரயிலில் ஏறிய பிறகு அது வேகமாக நகர தொடங்கியது, ஆனால் என் நண்பர்கள் ரயிலில் ஏற முடியவில்லை. அதனால் நாள் கீழே இறங்க முயற்சி செய்தேன். அப்போது குதித்ததில் துரதிஷ்டவசமாக பின்பக்கம் கீழே படும் வகையில் விழுந்துவிட்டேன். அதனால் தலையில் அடிபட்டது."
"முதுகில் அடி, தலையில் அடிபட்டு வீக்கம், உடல் முழுக்க சிராய்ப்புகள் இருக்கிறது. தற்போது சிகிச்சையில் இருக்கிறேன்" என நடிகை கரிஷ்மா சர்மா கூறி இருக்கிறார்.



