தனுஷின் கர்ணன் திரைப்படத்திற்கு கிடைக்கவுள்ள அங்கீகாரம்! என்ன தெரியுமா?
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளியான திரைப்படம் தான் கர்ணன்.
இப்படம் மிக சிறந்த விமர்சனங்களையும் ரசிகர்களிடையே மிக பெரிய வரவேற்பையும் பெற்று வெற்றியடைந்தது.
கர்ணன் படத்தின் வெற்றியை தொடர்ந்து தனுஷ் மற்றும் மாரி செல்வராஜ் கூட்டணியில் மீண்டும் ஒரு திரைப்படம் உருவாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் தற்போது ஜெர்மனி Frankfurt நகரில் நடைபெறவுள்ள New Generations Indian Film Festival-ல் கர்ணன் திரைப்படம் திரையிடப்பட உள்ளதாக மாரி செல்வராஜ் அறிவித்துள்ளார்.
#Karnan for the New Generations- Independent Indian Film Festival, Frankfurt. 🐘@theVcreations @dhanushkraja @Music_Santhosh @thenieswar @EditorSelva @NewGenFFM pic.twitter.com/ttWZwhKjEb
— Mari Selvaraj (@mari_selvaraj) September 14, 2021