கர்ணன் படத்தின் முக்கிய காட்சி மாற்றப்படுகிறதா? முன்னணி நடிகர் வெளியிட்ட பதிவு
நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் கர்ணன், இப்படம் ரசிகர்களிடையே பெரிய வரவேற்பை பெற்று வருகிறது.
மேலும் இப்படம் வெளியான முதல் நாளிலே ரூ.10.60 கோடிக்கும் மேல் வசூல் செய்து சாதனை படைத்தது, இதனால் இப்படம் நடிகர் தனுஷின் திரைப்பயணத்தில் வெளியான முதல் நாளிலே அதிக வசூல் செய்த திரைப்படமாக அமைந்துள்ளது.
இந்நிலையில் கர்ணன் திரைப்படம் குறித்து தினம்தோறும் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்களும் இணையதளத்தில் பதிவிட்டு வருகின்றனர். அந்த வகையில் தற்போது பிரபல நடிகர் உதயநிதி ஸ்டாலின் கர்ணன் படம் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அதில் "கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. தனுஷ், தாணு, மாரி செல்வராஜ் ஆகிய மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரி செய்துவிடுகிறோம்’ என உறுதியளித்தனர். நன்றி" என பதிவிட்டுள்ளார்.
‘கர்ணன்’ பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் @dhanushkraja,அண்ணன் @theVcreations, இயக்குநர்@mari_selvaraj மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.
— Udhay (@Udhaystalin) April 13, 2021