கர்ணன் படத்தை பார்த்துவிட்டு நடிகர் விக்ரம் செய்த விஷயம், இணையத்தில் செம ட்ரெண்டிங் போட்டோ
இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடிப்பில் கடந்த வாரம் வெளியான திரைப்படம் தான் கர்ணன். இப்படம் தற்போது மிக சிறந்த விமர்சனங்களை பெற்று ரசிகர்களின் பேராதரவை பெற்று வருகிறது.
மேலும் இப்படம் குறித்து இணையதளத்தில் தினமும் முக்கிய நட்சத்திரங்கள் பலரும் புகழ்ந்து பதிவிட்டு வருகின்றனர்.
அந்த வகையில் தற்போது நடிகர் விக்ரம் கர்ணன் படத்தை பார்த்துவிட்டு இயக்குனர் மாரி செல்வராஜின் வீட்டிற்கே சென்று அவரை பாராட்டியுள்ளார்.
மேலும் அவர்கள் இருவரும் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படமும் தற்போது வெளியாகியுள்ளது.
அதுமட்டுமின்றி அடுத்ததாக மாரி செல்வராஜ் இயக்கும் படத்தில் விக்ரமின் மகன் துருவ் விக்ரம் ஹீரோவாக நடிக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
#ChiyaanVikram pays a Surprise Visit to Director #MariSelvaraj to congratulate him on the success of #Karnan after watching the special screening of the film.😎🔥👏👍👌#KarnanBlockBuster #Karnanmovie @dhanushkraja @mari_selvaraj @theVcreations @Music_Santhosh @V4umedia_ pic.twitter.com/9pbRg8Zz7f
— RIAZ K AHMED (@RIAZtheboss) April 14, 2021