கேஜிஎப் யாஷ், நயன்தாரா நடிக்கும் படத்திற்கு வந்த சிக்கல்.. அதிரடி காட்டிய அரசு
கேஜிஎப் யாஷ்
கன்னட திரையுலகில் பிரபலமான நடிகராக இருந்த யாஷ், கேஜிஎப் படத்தின் மூலம் உலகளவில் பிரபலமானார். இதற்குமுன் ஏராளாமான படங்களில் இவர் நடித்திருந்தாலும், கேஜிஎப் படம்தான் மக்கள் மத்தியில் வரவேற்பை ஏற்படுத்தியது.
இதை தொடர்ந்து வெளிவந்த இப்படத்தின் இரண்டாம் பாகமும் மாபெரும் வெற்றியடைந்தது. உலகளவில் ரூ. 1200 கோடிக்கும் மேல் வசூல் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
கேஜிஎப் யாஷ் நடிப்பில் தற்போது உருவாகி வரும் திரைப்படம்தான் டாக்சிக். இப்படத்தை கீது மோகன்தாஸ் இயக்கி வருகிறார். நயன்தாரா, கியாரா அத்வானி, ஹுமா குரேஷி ஆகியோர் முக்கிய நடித்து வருகிறார்கள்.
படத்திற்கு வந்த சிக்கல்
சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளிவந்து இணையத்தில் வைரலானது. இப்படத்தின் படப்பிடிப்பு தற்போது கர்நாடகாவில் பல்வேறு இடங்களில் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், படப்பிடிப்பின்போது, பெங்களுருவில் உள்ள வனப்பகுதியில் நூற்றுக்கணக்கான மரங்கள் சட்டவிரோதமாக வெட்டப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.
இதன் அடிப்படையில் விளக்கம் கேட்டு படத்தின் தயாரிப்பு நிறுவனத்திற்கு கர்நாடக அரசு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். அரசு அனுப்பியிருக்கும் இந்த நோட்டீஸிற்கு படக்குழு அளிக்கும் பதிலை வைத்துதான் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

மறுமணத்தை மறுத்த பாக்கியா- அசிங்கப்பட்டு வெளியேறிய ஈஸ்வரி.. பதில் கேள்வி எழுப்பும் குடும்பத்தினர் Manithan
