சிவகார்த்திகேயனை தொடர்ந்து கார்த்தி கொடுத்த புயல் நிவாரண நிதி! எவ்வளவு தெரியுமா?
சமீபத்தில் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களை புரட்டிப்போட்டது ஃபெஞ்சல் புயல். மிக அதிக மழை பெய்ததால் திருவண்ணாமலை உள்ளிட்ட பல மாவட்டங்கள் பெரிய பாதிப்பை சந்தித்து இருக்கின்றன.
சமீபத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் 10 லட்சம் ரூபாய் புயல் நிவாரண நிதியாக அளித்து இருந்தார். அதனை தொடர்ந்து தற்போது கார்த்தி ஒரு பெரிய தொகையை வழங்கி இருக்கிறார்.
கார்த்தி
புயல் நிவாரண பணிகளுக்காக முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு நடிகர் கார்த்தி 15 லட்சம் ரூபாய் வழங்கி இருக்கிறார்.
நடிகரும் துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலினை நேரில் சந்தித்து கார்த்தி அந்த தொகைக்கான காசோலையை வழங்கி இருக்கிறார்.
ஃபெஞ்சல் புயல் மற்றும் கன மழை, 14 மாவட்டங்களில் பல்வேறு இழப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில், கழக அரசு மேற்கொண்டு வரும் நிவாரணப்பணிகளுக்குத் துணை நிற்கும் விதமாக, ‘முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு’ நடிகரும் - @UzhavanFDN அமைப்பின் நிறுவனருமான சகோதரர் @Karthi_Offl அவர்கள் ரூபாய்… pic.twitter.com/yv97h1bul1
— Udhay (@Udhaystalin) December 8, 2024