மர்ம நபர்களால் ஹேக் செய்யப்பட்டது நடிகர் கார்த்தியின் Facebook.. ஷாக்கிங் தகவல்
கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் கார்த்தி. இவர் நடிப்பில் அண்மையில் வெளிவந்த சர்தார் திரைப்படம் மாபெரும் அளவில் வெற்றிபெற்றுள்ளது.
இதை தொடர்ந்து அடுத்ததாக ராஜு முருகன் இயக்கத்தில் ஜப்பான் எனும் திரைப்படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். இப்படத்தின் பூஜை அண்மையில் தான் போடப்பட்டது.

ஹேக் செய்யப்பட்ட Facebook
இந்நிலையில், நடிகர் கார்த்தியின் Facebook பக்கத்தில் அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் சிலர் ஹேக் செய்துள்ளதாக அவரே தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
கார்த்தியின் இந்த பதிவு ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளது. மேலும், விரைவில் தன்னுடைய Facebook கணக்கை மீட்டு எடுத்துவிடுவேன் என்று கார்த்தி தெரிவித்துள்ளார்.
Hello guys, my Facebook page has been hacked. We are trying to restore it with Fb team.
— Karthi (@Karthi_Offl) November 14, 2022