கார்த்தியின் கைதி படத்தில் நடித்த இந்த சிறுமியை நியாபகம் இருக்கா?... தீபாவளி ஸ்பெஷலாக வெளியிட்ட போட்டோ
கைதி படம்
கைதி, கடந்த 2019ம் ஆண்டு லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் திரையரங்குகளில் வெளியான திரைப்படம் கைதி.
இந்தப் படம் வெளியாகி பெரிய அளவில் ஹிட்டானது, லோகேஷ் கனகராஜ் திரைப்பயணத்தில் நிறைய வெற்றிப்படமாக அமைந்தது. இதில் நடிகர் கார்த்தியின் மகள் கதாபாத்திரத்தில் நடித்து மக்களின் கவனத்தை பெற்றவர் சிறுமி பேபி மோனிகா சிவா.

இப்படத்திற்கு முன் விஷ்ணு விஷால் நடிப்பில் வெளியான ராட்சசன் படத்தில் நடித்தார், இந்தப் படங்களுக்கு முன்னதாக 2017ம் ஆண்டு விஜய் நடித்த பைரவா படத்திலும் நடித்திருந்தார்.
பின் ஆண் தேவதை, சங்குசக்கரம், பெட்ரோமாக்ஸ் உள்ளிட்ட படங்களில் நடித்தவர் எறும்பு என்ற படத்திலும் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி பாராட்டுக்களை பெற்றார்.

லேட்டஸ்ட்
தமிழ் மட்டுமல்லாமல், மலையாளத்தில் மம்மூட்டியுடன் ‘தி பிரிஸ்ட்’ படத்திலும் நடித்து கலக்கியிருப்பார் மோனிகா.

படங்களுக்கு குழந்தை நட்சத்திரமாக நாம் பார்த்து பழக இப்போது அவர் நன்றாக வளர்ந்து ஆளே அடையாளம் தெரியாத அளவிற்கு மாறிவிட்டார்.
தீபாவளி ஸ்பெஷலாக அவர் வெளியிட்ட போட்டோக்களை பார்த்த ரசிகர்கள் அட கைதிட பட சிறுமியா இது என ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
