சர்தார் 2 ஷூட்டிங்கில் விபத்தில் சிக்கிய நடிகர் கார்த்தி.. படப்பிடிப்பு ரத்து, என்ன ஆனது?
கார்த்தி
நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர். பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார்.
இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.

பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
இப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது. முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வருகிறது.

என்ன ஆனது?
இந்நிலையில், 'சர்தார் 2' படத்தின் சண்டை காட்சியை படமாக்கியபோது நடிகர் கார்த்திக்கு காலில் காயம் ஏற்பட்டு படப்பிடிப்பை நிறுத்திவிட்டு படக்குழு சென்னை திரும்பியுள்ளதாம்.
காலில் வீக்கம் ஏற்பட்டிருப்பதால் ஒரு வாரம் அவர் ஓய்வு எடுக்க வேண்டும் என மருத்துவர் அறிவுறுத்தியுள்ளார் என்று தகவல் வெளியாகி உள்ளது.
அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்த உடன்.. - 5 தேர்தல் வாக்குறுதிகளை அறிவித்த எடப்பாடி பழனிசாமி IBC Tamilnadu
திருமணம் ஆகாமல் கருவுற்றால் அபராதம்! மணமுடிக்காமல் ஒன்றாக வாழ்ந்தால் 70 டொலர்..எங்கு தெரியுமா? News Lankasri