விஜயகாந்தை பிறந்தநாளில் நேரில் சந்தித்த முன்னணி நடிகர்! அடையாளம் கண்டுகொண்டாரா?
விஜயகாந்த்
நடிகர் விஜயகாந்த் ஒருகாலத்தில் தமிழ் சினிமாவில் மிரட்டலான ரோல்களில் நடித்தவர். ஆனால் தற்போது உடல்நலக்குறைவு காரணமாக அவர் இருக்கும் நிலையை பார்த்து ரசிகர்கள் கவலையில் இருக்கிறார்கள்.
சமீபத்தில் ஒரு நிகழ்ச்சியில் விஜயகாந்த் கலந்துகொண்டபோது, அவருக்கு கண்ணாடி அணிவிக்க அவரது மனைவி முயற்சிக்கும் வீடியோ இணையத்தில் வைரல் ஆனது. விஜயகாந்துக்கா இந்த நிலை என ரசிகர்கள் கலக்கம் அடைந்தனர்.
பிறந்தநாளில் நேரில் சந்தித்த கார்த்தி
இன்று விஜயகாந்தின் 70வது பிறந்தநாள் என்பதால் அவருக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் நடிகர் கார்த்தி விஜயகாந்தின் வீட்டுக்கு சென்று அவரை நேரில் சந்தித்து வாழ்த்து கூறி இருக்கிறார்.
அவர் தன்னை அடையாளம் கண்டுகொண்டார் எனவும், நடிகர் சங்கத்தின் சார்பில் நேரில் சந்தித்து வாழ்த்து சொல்ல கடமைப்பட்டு இருப்பதாக கார்த்தி மேலும் குறிப்பிட்டு இருக்கிறார்.
“என்ன பார்த்ததும் அடையாளம் கண்டுகிட்டாரு.. ரொம்ப சந்தோஷமா இருந்துச்சு.. ”
— Sun News (@sunnewstamil) August 25, 2022
- விஜயகாந்தை சந்தித்து வாழ்த்து கூறிய நடிகர் கார்த்தி#Sunnews | #Karthi |#Vijayakanth | @Karthi_Offl pic.twitter.com/FXFeTQtkU4