கார்த்தியின் அடுத்த படத்தின் ரிலீஸ் எப்போது தெரியுமா.. காத்திருந்த ரசிகர்களுக்கு செம சர்ப்ரைஸ்..
கார்த்தி
தமிழ் சினிமாவில் முக்கிய நட்சத்திரமாக இருப்பவர் நடிகர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த திரைப்படம் ஜப்பான். இப்படம் எதிர்பார்த்த வரவேற்பை மக்கள் மத்தியில் பெறவில்லை.
இதை தொடர்ந்து தற்போது மூன்று திரைப்படங்களை நடிகர் கார்த்தி கைவசம் வைத்துள்ளார். வா வாத்தியாரே, மெய்யழகன் மற்றும் சர்தார் 2 உள்ளிட்ட படங்களை கைவசம் வைத்துள்ளார். இதில் பிரேம் குமார் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் மெய்யழகன்.
ரிலீஸ்
இயக்குனர் பிரேம் குமார் இதற்கு முன் இயக்கிய திரைப்படம் தான் 96. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மெய்யழகன் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து அரவிந்த் சாமி நடித்து வருகிறார்.
இந்த நிலையில், இப்படத்தை ஆகஸ்ட் மாதம் 15ஆம் தேதி வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்து தயாரிப்பு நிறுவனத்திடம் இருந்து அறிவிப்பு விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

₹25 கோடி லாஸ் ஏஞ்சல்ஸ் சொகுசு பங்களா முதல் ₹3 கோடி மெர்சிடிஸ் கார் வரை! ஏ.ஆர். ரஹ்மானின் பிரம்மாண்டமான வாழ்க்கை News Lankasri

பாப்பரசர் இறுதிச் சடங்கில் ஜெலென்ஸ்கிக்கு முன் வரிசையில் இடம்... வெளிவரும் உண்மையான காரணம் News Lankasri
