கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ்.. திடீரென ஸ்டூடியோ க்ரீன் அறிவிப்பு, ரசிகர்கள் அப்செட்!
வா வாத்தியார்
நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் வா வாத்தியார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார். சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

ரசிகர்கள் அப்செட்!
இந்நிலையில், கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் இந்த ஆண்டு பொங்கலுக்கு வரும் என எதிர்பார்த்த நிலையில், டிசம்பர் மாதம் கூட இன்னமும் ரிலீஸ் தேதியை அறிவிக்காமல் இருப்பது தான் ரசிகர்களை கோபத்தில் ஆழ்த்தியுள்ளது.
இன்று வெளியான அறிவிப்பில் வா வாத்தியார் படத்தின் தெலுங்கு டைட்டில் அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
ஆனால், வா வாத்தியார் தமிழ் வெர்ஷன் ரிலீஸ் பற்றி இந்த அறிவிப்பில் எதுவும் இல்லை. இதனால் படத்தின் ரிலீஸில் தாமதம் ஏற்படுமா என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது.
