தள்ளிப் போகிறதா கார்த்தியின் வா வாத்தியார் படத்தின் ரிலீஸ்?.. வெளியான முக்கிய தகவல்
கார்த்தி
நடிகர் கார்த்தி, கடைசியாக பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் பார்த்தவர். காதல், கமர்ஷியல், ஆக்ஷன் மற்றும் வரலாற்று படம் என தனது திரைப்பயணத்தில் நிறைய வித்தியாசமான படங்களை தேர்வு செய்து நடித்து வருகிறார்.
தற்போது நலன் குமாரசாமி இயக்கத்தில் வா வாத்தியார் என்ற படத்தில் நடித்து முடித்துள்ளார், இப்படத்தில் இவருடன் கீர்த்தி ஷெட்டி, சத்யராஜ், ஆனந்தராஜ், ராஜ்கிரண், ஷில்பா மஞ்சுநாத், கருணாகரன், வடிவுக்கரசி என பலர் நடித்து வருகின்றனர்.
ரிலீஸ்?
இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் குறித்து முக்கியமான தகவல் வெளியாகி உள்ளது.
அதன்படி, "'வா வாத்தியார்' படத்திற்கான படப்பிடிப்பு இன்னும் முடிக்கப்படவில்லை. மேலும், கூடுதலாக 20 நாட்கள் தேவைப்படும் நிலையில் படத்தின் ரிலீஸ் தேதி தள்ளிப் போக இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.