கார்த்தியின் சர்தார் 2 படத்தின் ஷூட்டிங் நிறைவு.. ரிலீஸ் எப்போது தெரியுமா?
சர்தார் 2
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் நடிகர் கார்த்தி. கடைசியாக இவர் பிரேம்குமார் இயக்கத்தில் மெய்யழகன் என்ற படத்தில் நடித்து நல்ல ஹிட் கண்டார்.
பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் கார்த்தி நடித்து கடந்த 2022ஆம் ஆண்டு வெளிவந்த திரைப்படம் சர்தார். இந்த படம் தண்ணீர் மாஃபியாவை மையப்படுத்தி எடுக்கப்பட்டது, இந்த படத்தில் கார்த்தி இரட்டை வேடங்களில் நடித்திருந்தார்.
பிரின்ஸ் பிக்சர்ஸ் சார்பில் எஸ்.லக்ஷ்மன்குமார் தயாரிப்பில் உருவான இந்த படத்தில் கார்த்தியுடன், ராஷிகண்ணா, ரஜிஷா விஜயன் நாயகிகளாக நடித்திருந்தனர். ஜி.வி. பிரகாஷ்குமார் இசையமைத்திருந்தார்.
முதல் பாகத்தின் வெற்றியை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகம் விறுவிறுப்பாக உருவாகி வந்தது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், பாங்காக்கில் படப்பிடிப்பை நிறைவு செய்த சர்தார் 2 படக்குழு, ஹுவாஹின் ஏர்போர்டின் வெளியே கேக் வெட்டி கொண்டாடி இருக்கின்றனர். சர்தார் 2 படத்தை இந்த ஆண்டு டிசம்பர் மாதம் கிறிஸ்துமஸ் விடுமுறையில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளார்களாம்.

இந்தியாவை கல்லறை என விமர்சித்துள்ள சீன ஊடகம் - இரு நாடுகளின் உறவை மேம்படுத்த வலியுறுத்தல் News Lankasri
