வெளிவந்த கார்த்தி 29 படம் குறித்த அதிரடி அப்டேட்.. ஷூட்டிங் எப்போது தெரியுமா?
கார்த்தி
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக, ஒவ்வொரு படத்திற்கும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் கார்த்தி.
பருத்திவீரன் படத்தில் துவங்கிய இவரது பயணம் ஆயிரத்தில் ஒருவன், நான் மகான் அல்ல, மெட்ராஸ், கடைக்குட்டி சிங்கம், கைதி, தீரன், பொன்னியின் செல்வன் என தொடர்ந்து பல ஹிட் படங்கள் வெளியானது.
கடைசியாக கார்த்தி நடிப்பில் கடந்த ஆண்டு மெய்யழகன் திரைப்படம் வெளியாகி மாஸ் வரவேற்பு பெற்றது. தற்போது,சர்தார் 2 மற்றும் வா வாத்தியாரே ஆகிய இரண்டு திரைப்படங்கள் வெளிவரவுள்ளது.
அடுத்ததாக தனது 29வது படத்தில் கார்த்தி நடிக்க உள்ளார். அப்படத்தை டாணாக்காரன் படத்தின் இயக்குநர் தமிழ் இயக்க உள்ளார்.
பிரம்மாண்ட பொருட்செலவில் உருவாக்க உள்ள இப்படத்தில் நடிகர் கார்த்தி உடன் ஜெயராம், நிவின் பாலி ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
எப்போது தெரியுமா?
இந்நிலையில், இப்படம் குறித்து ஒரு அதிரடி அப்டேட் வெளியாகி உள்ளது. அதன்படி, இப்படம் இலங்கை - ராமேஸ்வரம் கடற்பகுதியில் வாழ்ந்த கடற்கொள்ளையர்களை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளதாம். மேலும், இப்படத்தின் ஷூட்டிங் இந்த ஆண்டு இறுதியில் தொடங்கப்பட உள்ளது.

நடிகர் சூர்யாவின் பிள்ளைகள் தனது Pocket-Money-யை என்ன செய்கிறார்கள்? சித்தப்பா கார்த்தி கூறிய உண்மை Manithan
