நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்..

actor karthi paruthiveeran kaithi komban beast kadaikutty singam siruthai beast movies theeran
By Jeeva Apr 06, 2022 02:20 PM GMT
Report

தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் முக்கிய நடிகர்களில் ஒருவராகவும் திகழ்ந்து வருபவர் நடிகர் கார்த்தி. நடிகர் சிவகுமாரின் இரண்டாவது மகனும், சூர்யாவின் தம்பியுமான கார்த்தி தமிழ் திரையுலகிற்கு உதவி இயக்குனராக ஆயுத எழுத்து திரைப்படத்தின் அறிமுகமானார்.

அப்படத்தை தொடர்ந்து பருத்திவீரன் படத்தின் மூலம் கதாநாயகனாக அறிமுகமான கார்த்தி. இன்று தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராகியுள்ளார். ஆம், அவர் இதுவரை 20 படங்களில் நடித்துள்ள கார்த்தி ஒருமுறை கூட ஒரே இயக்குனருடன் இரண்டு முறை பணியாற்றியதில்லை.

மேலும் ஒரு நடிகரின் திரை பயணத்தில் அதிக வெற்றி படங்களை கொடுத்துள்ள ஒரே நடிகரும் கார்த்தி தான். அப்படியான சிறந்த நடிகரான கார்த்தியின் திரைப்பயணத்தில் வெளியான டாப் திரைப்படங்கள் குறித்த பட்டியலை தான் பார்க்கவுள்ளோம்.  

பருத்திவீரன்

கடந்த 2007 ஆம் ஆண்டு இயக்குனர் அமீர் இயக்கத்தில் கார்த்தி ஹீரோவாக அறிமுகமான திரைப்படம் பருத்திவீரன். தமிழ் சினிமாவில் எந்தஒரு நடிகரும் அறிமுக படத்திலே இப்படியொரு நடிப்பை வெளிப்படுத்தி அறிமுகமானதில்லை. கார்த்தி இன்னும் எத்தனை சிறந்த திரைப்படங்களை கொடுத்தாலும் பருத்திவீரன் திரைப்படம் போல மக்களிடையே தாக்கத்தை ஏற்படுத்துமா என்பது கேள்வி குறியே.

பருத்திவீரன் என்ற மாபெரும் திரைப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமான கார்த்தி தொடர்ந்து வெற்றிப்படங்களையே ரசிகர்களுக்கு கொடுத்து வருகிறார்.  

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

ஆயிரத்தில் ஒருவன்

பருத்திவீரன் படத்தை தொடர்ந்து கார்த்தி ஹீரோவாக நடித்த இரண்டாவது திரைப்படம் ஆயிரத்தில் ஒருவன். இயக்குனர் செல்வராகவின் இயக்கத்தில் மிக பெரிய பொருட்செலவில் உருவான அப்படத்தை தமிழ் திரையுலகமே எதிர்பார்த்தது. இப்போது சிறந்த திரைப்படம் என ஆயிரத்தில் ஒருவன் அங்கீகரிக்கப்படுகிறது.

ஆனால் படம் வெளியான போது மக்களிடையே பெரிய வரவேற்பை பெறவில்லை. நடிகர் கார்த்தி கூட ஒரு பேட்டியில் படம் வரும்போது யாருமே அப்படத்தை பார்க்கவில்லை என வருத்தத்துடன் பேசியிருப்பார்.   

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

சிறுத்தை

கடந்த 2011 ஆம் ஆண்டு சிவா இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான திரைப்படம் தான் இந்த சிறுத்தை, S.S.ராஜமௌலி இயக்கத்தில் தெலுங்கில் வெளியான Vikramarkudu படத்தின் ரீமேக்காக சிறுத்தை திரைப்படம் வெளியானது. அதுவரை கார்த்தி நல்ல நடிகராக திகழ்ந்து வந்த கார்த்தி, சிறுத்தை படத்தின் மக்களிடையே ஒரு மாஸ் ஹீரோவாகவும் மாறினார்.

கார்த்தியின் திரைப்பயணத்தில் சிறந்த கமர்சியல் திரைப்படம் என எடுத்து பார்த்தால் சிறுத்தை திரைப்படம் தான் டாப்பில் இருக்கும்.  

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

மெட்ராஸ்

இயக்குனர் பா.ரஞ்சித் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் 2014 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் மெட்ராஸ். வட சென்னை மக்களின் வாழ்வியலையும், ஒரு சுவற்றை வைத்து நடத்தப்படும் அரசியல் மோதல்களை இப்படத்தில் காட்டியிருப்பார்கள். பெரிய எதிர்பார்ப்பு ஏதும் இல்லாமல் வெளியான மெட்ராஸ் திரைப்படத்தை ரிலீஸுக்கு பின்பு ரசிகர்கள் அனைவரும் தூக்கி வைத்து கொண்டாடினர்.

பரபரப்பான கதைக்களத்தை கொண்ட மெட்ராஸ் திரைப்படம் கார்த்தியின் திரைப்பயணத்தில் வெளிவந்த சிறந்த படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.  

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

கொம்பன்

வரிசையாக ஹிட் கொடுத்து வந்த கார்த்தி நடிப்பில் 2015 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் கொம்பன், இயக்குனர் முத்தையா இயக்கத்தில் நடித்த கார்த்தி மீண்டும் கிராமத்து கெட்டப்பிலும், அசத்தலான உடல்பவனைகளை வைத்து மிரட்டியிருப்பார். தனது ஊரில் நடக்கும் அநியாயங்களை தட்டி கேட்கும் கொம்பையா, தன் மனைவி மற்றும் மாமனாரை வில்லன்களிடம் எப்படி காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் ஒன் லைன்.

பட்டிதொட்டி எங்கும் கழைக்கட்டிய கொம்பன் திரைப்படம் கார்த்தியின் சிறந்த திரைப்படங்களில் ஒன்று என்பதில் சந்தேகமே இல்லை.  

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

தீரன் : அதிகாரம் ஒன்று

இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் கடந்த 2017 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தீரன் : அதிகாரம் ஒன்று. இயக்குனர் வினோத் இன்று பெரியளவில் அறியப்படுவதற்கு முக்கிய காரணமாக இருப்பதே தீரன் திரைப்படம் தான். தமிழக குடியிருப்புகளில் நடக்கும் கொலை, கொள்ளைகளுக்கு காரணமாக இருக்கும் பவாரியா கும்பலை கார்த்தி வேறு மாநிலம் வரை தேடிச்சென்று வேட்டையாடுவதே தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை.

உண்மை சம்பவங்களை மையமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படத்தை இயக்குனர் எச்.வினோத் பல போலீஸ் அதிகாரிகளின் பின்னால் அழைத்து தகவல்களை சேகரித்தது குறிப்பிடத்தக்கது. கார்த்தி திரைப்பயணத்தில் வெளியான மிக முக்கிய படங்களில் தீரன் கட்டாயமாக இடம் பிடித்திருக்கும்.   

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

கடைக்குட்டி சிங்கம்

ஆக்ஷன், மாஸ் என கலக்கி வந்த கார்த்தி பேமிலி ஆடின்ஸை பெரியளவில் கவராமல் இருந்தார், ஆனால் அதனை பூர்த்தி செய்த திரைப்படம் கடைக்குட்டி சிங்கம். ஐந்து அக்காக்கள் மற்றும் ஒரு தம்பிக்கு இடையே நடக்கும் பாசப்போராட்டமே கடைக்குட்டி சிங்கம். இயக்குனர் பாண்டிராஜ் இயக்கத்தில் கடந்த 2018 ஆம் ஆண்டு வெளியான கடைக்குட்டி சிங்கம் மாபெரும் வரவேற்பை பெற்று அந்த வருடம் அதிக வசூலை குவித்த திரைப்படங்களில் ஒன்றாக அமைந்தது.

இன்றும் கூட இப்படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பனால் குடும்பத்துடன் பார்த்து ரசிப்பவர்கள் உண்டு.   

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

கைதி

இன்று தமிழ் திரையுலகின் டாப் இயக்குனராக மாறியுள்ள லோகேஷ் கனகராஜ், அனைவரும் கொண்டாடும் காரணம் கைதி திரைப்படம் தான். 2019 ஆம் ஆண்டு கார்த்தி - லோகேஷ் கூட்டணியில் உருவான இந்த கைதி திரைப்படம் அதே நாளில் விஜயின் பீஸ்ட் திரைப்படத்துடன் மோதியது. முற்றிலும் புதிய முயற்சியாக பாடல்கள், கதாநாயகி ஏதும் இல்லாமல் பக்கா ஆக்ஷன் திரைப்படமாக வெளியான கைதி, 100 கோடிக்கு மேல் வசூலை குவித்து சாதனை படைத்தது.

நீங்கள் மிஸ் செய்யாமல் பார்க்க வேண்டிய நடிகர் கார்த்தியின் சிறந்த திரைப்படங்கள்.. | Karthi Movies In Tamil

தமிழகம் முழவதும் எத்தனை திரையரங்குகளில் பீஸ்ட் திரைப்படம் வெளியாகிறது தெரியுமா?

   




(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US