மகனின் புகைப்படத்தை முதன் முதலில் வெளியிட்ட நடிகர் கார்த்தி.. அழகிய புகைப்படம்
தமிழ் சினிமாவின் சென்சேஷன் நடிகர்களில் ஒருவர் கார்த்தி. இவர் தற்போது விருமன் படத்தில் நடித்துள்ளார்.
இப்படம் மட்டுமின்றி, இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பொன்னியின் செல்வன் படத்தில் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
மேலும், தற்போது பி.எஸ். மித்ரன் இயக்கத்தில் உருவாகி வரும் சர்தார் படத்தின் படப்பிடிப்பில் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் கார்த்தி கடந்த 2011ஆம் ஆண்டு ரஞ்சனி என்பவரை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு உமையாள் எனும் அழகிய பெண் குழந்தை முதலில் பிறந்தது.
பின் சில வருடங்கள் கழித்து மீண்டும் தந்தையாகியுள்ளேன், மகன் பிறந்துள்ளார் என்று கார்த்தி அறிவித்திருந்தார். மகனின் பெயர் கந்தன் என்றும் கூறினார்.
இந்நிலையில், முதல் முறையாக தனது மகனுடன் இருக்கும் அழகிய புகைப்படத்தை சமூக வலைத்தளத்தில் பதிவு செய்துள்ளார் கார்த்தி.
இதோ அந்த புகைப்படம்..