நடிகர் கார்த்தி
நடிகர் கார்த்தி போலீஸாக நடித்து செம வெற்றிப்பெற்ற திரைப்படம் சிறுத்தை. காமெடி, சென்டிமென்ட், சூப்பரான போலீஸ் என அசத்தியிருப்பார். அந்த படத்தை தொடர்ந்து மக்களால் கொண்டாடப்படுகிறது கார்த்தியின் சர்தார்.
பி.எஸ்.மித்ரன் இயக்கத்தில் கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான திரைப்படம் தான் சர்தார். இதில் கார்த்தியின் பல வேடங்கள் போட்டு நடித்துள்ளார், அதையே ரசிகர்கள் ஆச்சரியமாக பார்த்து வருகிறார்கள்.
ராஷி கண்ணா, லைலா என பலர் நடித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார்.
5 நாள் வசூல்
படம் ரிலீஸ் ஆகி 5 நாள் முடிவில் தமிழகத்தில் மட்டுமே படம் ரூ. 27 கோடி வரை வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. அடுத்தடுத்த நாட்களில் படத்தின் வசூல் வேட்டை எப்படி இருக்கிறது, மொத்தம் எவ்வளவு வசூலிக்கிறது என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

பிரித்தானியாவின் பாரிய இஸ்லாமிய கல்லறையை கட்டும் கோடீஸ்வர சகோதரர்கள்! எதிர்ப்பால் பின்னடைவு News Lankasri

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
