கார்த்தியின் சர்தார்
நடிகர் கார்த்தி தமிழ் சினிமாவில் மிகவும் தரமான படங்களாக கொடுத்து சாதனை செய்து வருபவர். படத்துக்கு படம் அவர் தேர்வு செய்யும் கதைகள் வித்தியாசமாக இருக்கும்.
இந்த வருடத்தில் கார்த்தியின் நடிப்பில் பொன்னியின் செல்வன், சர்தார் இரண்டு படங்கள் வெளியாகிவிட்டன. இதில் பொன்னியின் செல்வன் உலகம் முழுவதும் ரூ. 500 கோடி வரை வசூல் சாதனை செய்தது. அண்மையில் வெளியான கார்த்தியின் சர்தார் திரைப்படமும் வசூலில் செம கலெக்ஷன் பெற்று வருகிறது.
முதல் வாரத்தில் 380 திரையில் திரையிடப்பட்ட சர்தார் திரைப்படம் 2வது வாரத்தில் 500 திரைகளில் ஒளிபரப்பாகி இருக்கிறது.
பட விமர்சனங்கள் அமோகமாக வர அதிக திரையரங்குகளில் சர்தார் ஒளிபரப்பாகி இருக்கிறது.
பட வசூல்
கடந்த அக்டோபர் 21ம் தேதி வெளியான இப்படம் ரூ. 40 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. தற்போது உலகம் முழுவதும் இப்படம் ரு. 85 கோடி வரை வசூலிக்க லாபத்தில் படம் சென்று கொண்டிருக்கிறது.

சிரங்கு அரிப்புடன் திரும்பி வர விரும்பவில்லை - கும்பமேளா குறித்து பிரபல கால்பந்து வீரர்! IBC Tamilnadu

Optical illusion: படத்தில் 'Met' என்ற சொற்களில் ஒரு எழுத்து வித்தியாசத்தில் 'Mat' எங்கே உள்ளது? Manithan
