இயக்குனராக நடிகர் கார்த்தி.. ஹீரோ யார் தெரியுமா

movie surya karthi etharkum thuninthavan viruman
By Kathick Dec 08, 2021 12:00 PM GMT
Report

பருத்திவீரன் படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் நடிகராக அறிமுகமானவர் கார்த்தி.

இவர் இதற்கு முன் மணி ரத்னம் இயக்கத்தில் உருவான ஆயுத எழுத்து படத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்தார்.

பருத்திவீரன் படத்தை தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன், பையா, நான் மகான் அல்ல, மெட்ராஸ், கொம்பன் ஆகிய படங்களில் நடித்து வந்தார்.

தற்போது தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக இருக்கும் கார்த்தியின் கைவசம், சர்தார், பொன்னியின் செல்வன், விருமான், கைதி 2 ஆகிய படங்கள் உள்ளன.

இதில் பொன்னியின் செல்வன் படத்தின் படப்பிடிப்பு முழுமையாக முடிந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் நடிகர் கார்த்தியின், சில ஆண்டுகளுக்கு முன் தனது டுவிட்டர் பதிவில் ' நான் உதவி இயக்குனராக இருந்த பொழுது, எழுதிய கதையெல்லாம் என்னுடைய அண்ணனுக்காக தான். நான் இதன்பிறகு இயக்குனரானால், அண்ணன் தான் ஹீரோ' என்று கூறியிருந்தார்.

இது பழைய டுவிட் என்றாலும், கார்த்தி மற்றும் சூர்யாவின் ரசிகர்கள் அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து தற்போது டுவிட்டரில் வைரலாக்கி வருகிறார்கள். இதோ..

இயக்குனராக நடிகர் கார்த்தி.. ஹீரோ யார் தெரியுமா | Karthi To Direct Surya

(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US