சென்சேஷன் இயக்குனருடன் கைகோர்க்கும் கார்த்தி.. அட, இவரா
தமிழ் திரையுலகில் தனித்துவம் உள்ள கதைகளை தேர்ந்தெடுத்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவர் கார்த்தி.
இவர் தற்போது பொன்னியின் செல்வன், விருமன், சர்தார் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.
இந்த அனைத்து படங்களும் ரசிகர்கள் மத்தியில் மாபெரும் எதிர்பார்ப்பில் உள்ளது.
புதிய கூட்டணி
இந்நிலையில், நடிகர் கார்த்தி முதல் முறையாக சென்சேஷன் இயக்குனர் ராஜு முருகன் இயக்கத்தில் நடிக்கவுள்ளார்.

வில்லனாகும் மக்கள் செல்வன்
இப்படத்தில் கார்த்தியுடன் இணைந்து மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்கவுள்ளார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது. மேலும், இவர் வில்லனாக நடிக்கிறார் என்றும் கூறப்படுகிறது.
இயக்குனர் ராஜு முருகன் ஏற்கனவே வெளிவந்த குக்கூ, ஜோக்கர், ஜிப்ஸி ஆகிய சென்சேஷன் படங்களை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
