கார்த்தியின் வா வாத்தியாரே படத்தின் ரிலீஸ் எப்போது? அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளிவந்தது
வா வாத்தியார்
தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக வலம் வருபவர் கார்த்தி. இவர் நடிப்பில் கடைசியாக வெளிவந்த மெய்யழகன் படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்தது.
அடுத்ததாக வா வாத்தியார், சர்தார் 2, மார்ஷல் ஆகிய படங்கள் உருவாகி வருகின்றன. இதில், இயக்குநர் நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம்தான் வா வாத்தியார். ஸ்டூடியோ க்ரீன் நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தில் கார்த்திக்கு ஜோடியாக க்ரித்தி ஷெட்டி நடித்துள்ளார்.
சந்தோஷ் நாராயணன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த முதல் பாடல் நல்ல வரவேற்பை பெற்றது.
ரிலீஸ் அறிவிப்பு
இப்படத்தை திரையில் காண ரசிகர்கள் ஆர்வத்துடன் இருந்த நிலையில், ரிலீஸ் தேதி குறித்து அறிவிப்பு வெளிவர தாமதமாகி கொண்டே இருந்தது.
இந்த நிலையில், இன்று இப்படத்தின் ரிலீஸ் தேதியை தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது. அதன்படி, கார்த்தியின் வா வாத்தியார் திரைப்படம் வருகிற டிசம்பர் 5ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவித்துள்ளனர்.
The Swag Master locks the date! 💥#VaaVaathiyaar storms into theatres on December 05, 2025🔥
— Studio Green (@StudioGreen2) October 8, 2025
A #NalanKumarasamy Entertainer
A @Music_Santhosh Musical #VaaVaathiyaarOnDec5@Karthi_Offl @VaaVaathiyaar #StudioGreen @gnanavelraja007 @IamKrithiShetty #Rajkiran #Sathyaraj… pic.twitter.com/qXI2wC1b92