ரசிகர் திடீர் மரணம்.. வெளியூரில் இருந்து திரும்பிய கார்த்தி செய்த விஷயம்
கார்த்தி ரசிகர் மரணம்
சென்னையில் உள்ள திருவான்மியூரில் வசித்து வந்தவர் வினோத். இவர் நடிகர் கார்த்தியின் ரசிகர் மன்ற பொருளாளராக உள்ளார். 29 வயதான வினோத் சில தினங்களுக்கு முன்பு மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார். அந்த சமயத்தில் நடிகர் கார்த்தி படப்பிடிப்புக்காக வெளியூர் சென்றிருந்தார்.
நேரில் அஞ்சலி
இந்நிலையில் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்ததால் தற்போது மறைந்த ரசிகர் வினோத் வீட்டிற்கு சென்று அவரின் பெற்றோருக்கு ஆறுதல் கூறியுள்ளார்.
மேலும் அந்த குடும்பத்திற்க்கு பணமாக ஒரு தொகை கொடுத்து உதவியுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது. கார்த்தியின் இந்த செயலை பாராட்டி ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர்.
இதே போன்று பெரிய நடிகர்களும் அவர்களின் ரசிகர்களை மதிக்க வேண்டும் வேண்டும் என்று பதிவிட்டு வருகின்றனர்.
வாரிசு படம் சீரியல் என வந்த விமர்சனம்.. விஜய்யின் அப்பா எஸ்ஏசி கொடுத்த பதிலடி