மௌன ராகம் படத்தில் கார்த்திக் கதாபாத்திரத்தில் முதலில் நடிக்க இருந்தது இவர்தானா?- வருத்தப்பட்ட பிரபலம்
சினிமாவில் நடிக்க களமிறங்கும் நடிகர்களுக்கு எல்லா விஷயமும் சிறந்ததாக அமையாது.
அதாவது ஒரு கதை தேர்வு செய்து இன்னொரு கதையை விட்டுவிடுவார்கள், ஆனால் நடித்ததற்கு பதிலாக விட் கதை ஹிட்டாகிவிடும். 90களில் இருந்த நடிகர்கள் பலர் நான் படத்தை மிஸ் செய்தேன், இந்த படம் மிஸ் ஆகிவிட்டது என நிறைய விஷயங்கள் கூறி வருகிறார்கள்.
அப்படி 90களில் கலக்கிய ஒரு நடிகர் தான் மிஸ் செய்த படங்கள் குறித்து பேசியுள்ளார்.
ஆனந்த்
இவர் நடித்த ஹிட் படம் என்றால் முதலில் அனைவருக்கும் நியாபகம் வருவது திருடா திருடா தான். இவர் ஒரு பேட்டியில், மௌன ராகம் படத்தில் கார்த்திக் ரோலில் நான் நடிக்க வேண்டியது.
அதற்கு முன் அக்னி நட்சத்திரம் படத்தில் கார்த்தி நண்பனாக நடித்தேன் ஆனால் சரியாக இல்லை என நீக்கிவிட்டார்கள். ரோஜா படத்தில் நடிக்க என்னை அணுகினார்கள், அப்போது அரவிந்த் சாமி பெற்றோர்கள் உடல்நிலை சரியில்லாமல் இருந்ததால் என்னை அணுகினார்கள்.
Skill டெஸ்ட் எல்லாம் எடுத்தார்கள், ஆனால் நான் செட் ஆகவில்லை என்றனர். டூயட் படத்தில் நான் தான் ஹீரோவாக தேர்வானேன், அப்போது சம்பளத்தை பெரிதாக நினைத்து நான் நடிக்காமல் போனேன் என வருத்தப்பட்டு கூறியுள்ளார்.

இந்த ராசியில் பிறந்தவர்கள் புலி போல் பதுங்கி இருந்து வேலைப்பார்ப்பார்களாம்.. நீங்க என்ன ராசி? Manithan
