படப்பிடிப்பில் கொண்டாட்டத்தில் இறங்கிய கார்த்திகை தீபம் சீரியல் பிரபலங்கள்... என்ன ஸ்பெஷல், போட்டோஸ் இதோ
கார்த்திகை தீபம்
ஒவ்வொரு தொலைக்காட்சியிலும் ஒரு சீரியல் ஹிட்டாக ஒளிபரப்பாகி வருகிறது.
அப்படி ஜீ தமிழ் எடுத்துக் கொண்டால் டாப்பில் இருக்கும் தொடர் தான் கார்த்திகை தீபம், கார்த்திக்-ரேவதி கதாபாத்திரத்தை மையமாக கொண்டு இந்த சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.
திங்கள் முதல் வெள்ளி வரை இரவு 9 மணிக்கு ஒளிபரப்பாகும் இந்த சீரியலில் அண்மையில் சிவனாண்டி நவீன் மற்றும் துர்காவை கோவிலுக்குள் அடைத்து வைத்து இருக்க கார்த்திக் காப்பாற்றுகிறார்.
அடுத்தடுத்து பரபரப்பின் உச்சமாக கதையும் நகர்ந்து வருகிறது.
கொண்டாட்டம்
சீரியல் கதைக்களம் விறுவிறுப்பின் உச்சமாக ஒளிபரப்பாகி வர இன்னொரு பக்கம் சீரியல் படப்பிடிப்பு தளத்தில் கொண்டாட்டம் நடந்துள்ளது. அதாவது சீரியலில் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் ரேஷ்மா பசுபுலேட்டியின் பிறந்தநாள் கொண்டாட்டம் நடந்துள்ளது.
சீரியல் பிரபலங்கள் அனைவரும் சூழ கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடியுள்ளார். பிறந்தநாள் கொண்டாட்ட போட்டோஸ் வெளியாக ரசிகர்கள் வாழ்த்து கூறி வருகிறார்கள்.