தயவுசெய்து வதந்திகளை பரப்பாதீர்கள், வருத்தத்தில் கார்த்திகை தீபம் சீரியல் அர்த்திகா... என்ன ஆனது?
கார்த்திகை தீபம்
ஜீ தமிழில் ஒளிபரப்பாகும் தொடர்களில் படு ஹிட்டாக ஓடிக் கொண்டிருக்கும் சீரியல் கார்த்திகை தீபம்.
டிஆர்பி ரேட்டிங்கில் முதல் இடத்தில் இருக்கும் இந்த தொடரில் கார்த்திக் மற்றும் அர்த்திகா காதல் காட்சி, இருவரின் ஜோடி பொருத்தம் என அனைத்துமே மக்களால் கொண்டாடப்பட்டது.
அர்த்திகா இறந்துவிட்டதாக காட்டப்பட்டு தற்போது சீரியல் முடிக்கப்பட்டு கிராமத்து கதைக்களத்துடன் புது சீரியல் இன்று ஒளிபரப்பாக உள்ளது.
நடிகை வேதனை
முதல் பாகத்தில் நடித்த அர்த்திகாவை தவிர மற்ற அனைவரும் இந்த 2வது பாகத்தில் உள்ளனர்.
இதனால் அர்த்திகா குறித்து நிறைய வதந்திகள் சமூக வலைதளங்களில் உலா வருகின்றன. அர்த்திகா, திருமணம் ஆனதால் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க மறுத்துள்ளார், கர்ப்பமாக இருக்கிறார் என நிறைய வதந்திகள் உலா வந்தன.
இதுகுறித்து அர்த்திகா கூறுகையில், நான் ரொமான்ஸ் காட்சியில் நடிக்க ஒத்துழைக்காததால் நீக்கிவிட்டதாக தப்பு தப்பாக எழுதி வருகிறார்கள், அதில் உண்மை இல்லை. நடிக்க வந்துவிட்டால் இயக்குனர் சொல்வதை கேட்டுத்தான் ஆக வேண்டும்.
அதை செய்ய மாட்டேன், இதை செய்ய மாட்டேன் என்று சொல்ல முடியாது. அதே போல கர்ப்பமாக இருப்பதால் சீரியலில் இருந்து விலகி விட்டதாகவும் ஒரு செய்தி பரவி வருகிறது.
அப்படி எதுவும் இல்லை, அப்படி நான் கர்ப்பமானால் நிச்சயம் உங்களிடம் தான் முதலில் சொல்லுவேன் என தெரிவித்துள்ளார்.