ஜீ தமிழ் கார்த்திகை தீபம் சீரியல் நடிகை இப்படியொரு படம் நடித்துள்ளாரா?- இதோ பாருங்கள்
கார்த்திகை தீபம்
சன் மற்றும் விஜய் டிவியை தொடர்ந்து ஜீ தமிழிலும் ரசிகர்கள் கொண்டாடும் பல சீரியல்கள் ஒளிபரப்பாகி வருகின்றன.
அப்படி இப்போது மக்களின் பேராதரவோடு கார்த்திகை தீபம் தொடர் ஒளிபரப்பாகிறது, இதில் செம்பருத்தி சீரியல் புகழ் கார்த்திக் ராஜ், கார்த்திகேயா கதாபாத்திரத்தில் நடிக்கிறார்.
கதாநாயகியாக தீபா என்ற கதாபாத்திரத்தில் புதுமுக நடிகை ஹர்த்திகா நடிக்கிறார்.
கேரளாவை சேர்ந்த இவர் எந்தஒரு சினிமா பின்னணியும் இல்லாமல் திரைக்கு வந்துள்ளார்.
நடித்த படம்
திரைப்படங்களில் தான் முதலில் நடிக்க தொடங்கியுள்ளார், ஆனால் எந்த படமும் வெளியாகவில்லை.
மேலும் இவர் நடித்த படங்களில் ஒன்று தான் பிளான் அண்ட் வொயிட். இந்த படத்தில் ஹர்த்திகாவுக்கு ஜோடியாக கார்த்திக் ராஜ் நடித்திருந்தார். இந்த நிலையில் ஹர்த்திகா நடிக்கும் புதிய படம் குறித்த அப்டேட் வந்துள்ளது.
சமூகம் மற்றும் அரசியல் பாணியில் உருவாகியிருக்கும் படம் தான் வா பகண்டையா. பி.ஜெயக்குமார் எழுதி, இயக்க ஒளி ரெவிலேஷன் நிறுவனம் தயாரிக்கிறது. இந்த படத்தில் ஹீரோவாக விஜய தினேஷ் நடித்திருக்கிறார்.
ஹீரோயினாக கார்த்திகை தீபம் சீரியல் நடிகை கார்த்திகா நடித்திருக்கிறார். இவர்களுடன் படத்தில் வில்லனாக அஜித் கோலி, மும்பை நடிகர் யோகிராம் நடித்திருக்கிறார்கள். இந்த படம் வருகிற ஏப்ரல் 12ஆம் தேதி திரையரங்களில் வெளியாக இருக்கிறது.

காஷ்மீர் தாக்குதலில் திருமணமான 7 நாளில் உயிரிழந்த கணவர்.., தம்பதியினர் கடைசியாக எடுத்த வீடியோ வைரல் News Lankasri
